SplitEase+ என்றால் என்ன, அதில் என்ன உள்ளது?
SplitEase-இல் ஓர் இலவசத் திட்டமும், SplitEase+ எனப்படும் கட்டணத் திட்டமும் உள்ளன. இலவசத் திட்டத்தில் 3 குழுக்கள் வரை உருவாக்கலாம், எல்லா வகைப் பிரிப்புகளையும் பயன்படுத்தலாம், கணக்கைத் தீர்க்கலாம், நினைவூட்டல்களை அனுப்பலாம்.
படிகள்
- சுயவிவரம் (Profile) சென்று SplitEase+ இலவசமாக முயலுங்கள் (Try SplitEase+ free) என்பதைத் தட்டவும்.
- மாதாந்திர அல்லது ஆண்டுத் திட்டத்தைத் தேர்வுசெய்யவும். உறுதிப்படுத்துவதற்கு முன் உங்கள் நாட்டுக்கான விலை காட்டப்படும்.
- App Store அல்லது Google Play மூலம் வாங்குவதை உறுதிப்படுத்தவும்.
SplitEase+ வரம்பற்ற குழுக்கள், ரசீது ஸ்கேன், குரல் செலவுகள், தொடர் செலவுகள், மாதாந்திர பட்ஜெட்கள், செலவுப் பகுப்பாய்வு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றைச் சேர்க்கிறது.
கட்டண வசூலை App Store அல்லது Google Play கையாளுகிறது. புதுப்பித்தலை நிறுத்த, உங்கள் ஸ்டோர் கணக்கின் சந்தா அமைப்புகளில் ரத்துசெய்யுங்கள். ஆப்பை மீண்டும் நிறுவினால் அல்லது ஃபோனை மாற்றினால், SplitEase+ திரையில் மீட்டெடு (Restore) என்பதைத் தட்டவும்.
சில கணக்குகளுக்கு இலவச சோதனைக் காலம் வழங்கப்படும். அது உங்களுக்குத் தெரிந்தால், அது எப்போது முடியும் என்பதைத் திரை காட்டும்.
SplitEase ஆப் இன்னும் தமிழில் கிடைக்கவில்லை. அடைப்புக்குறிக்குள் உள்ள பொத்தான் பெயர்கள் திரையில் ஆங்கிலத்தில் தோன்றுபவை.