தொடர் செலவை அமைப்பது எப்படி?
தொடர் செலவு, நீங்கள் அமைத்த முறையில் பிரிக்கப்பட்டு, அதன் தேதியில் தானாகவே குழுவில் சேர்க்கப்படும். இது SplitEase+-இன் ஒரு பகுதி.
படிகள்
- குழுவைத் திறந்து, பிறகு குழு அமைப்புகள் (Group settings) திறக்கவும்.
- தொடர் செலவுகள் (Recurring expenses) என்பதைத் தட்டி, பிறகு சேர் (Add) என்பதைத் தட்டவும்.
- தொகை, யார் செலுத்துகிறார், எப்படிப் பிரிக்கப்படுகிறது என்பதை உள்ளிட்டு, எத்தனை முறை மீண்டும் வர வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்: தினமும், வாரந்தோறும், மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும்.
- சேமி (Save) என்பதைத் தட்டவும்.
ஒருமுறை தவிர்க்க, தொடர் செலவைத் திறந்து அடுத்த முறையைத் தவிர் (Skip the next occurrence) என்பதைத் தட்டவும். அதன் பிறகு அட்டவணை வழக்கம்போல் தொடரும்.
SplitEase ஆப் இன்னும் தமிழில் கிடைக்கவில்லை. அடைப்புக்குறிக்குள் உள்ள பொத்தான் பெயர்கள் திரையில் ஆங்கிலத்தில் தோன்றுபவை.