செலவைச் சேர்ப்பது எப்படி?
குழு பகிர்ந்துகொள்ளும் ஒன்றுக்கு யாராவது பணம் செலுத்தும்போது செலவைச் சேர்க்கவும். நீங்கள் சேமித்தவுடன் SplitEase அனைவரின் நிலுவையையும் புதுப்பிக்கும்.
படிகள்
- தாவல் பட்டியின் நடுவில் உள்ள + பொத்தானைத் தட்டவும், அல்லது குழுவைத் திறந்து செலவைச் சேர் (Add expense) என்பதைத் தட்டவும்.
- மேலே குழுவைச் சரிபார்த்து, தொகை (Amount) மற்றும் அது எதற்கானது என்பதை உள்ளிடவும்.
- செலுத்தியவர் (Paid by) என்பதன் கீழ், யார் செலுத்தினார் என்பதைத் தேர்வுசெய்யவும்.
- பிரிப்பு (Split) என்பதன் கீழ், யார் செலவைப் பகிர்கிறார்கள், எப்படி என்பதைத் தேர்வுசெய்யவும். இயல்பாகச் சமமாகப் பிரிக்கப்படும்.
- சேமி (Save) என்பதைத் தட்டவும்.
விளக்கத்தை வைத்து SplitEase ஒரு வகையைப் பரிந்துரைக்கும். சேமிப்பதற்கு முன் அதை மாற்றலாம்.
வேறு நாணயத்தில் செலுத்தியிருந்தால், தொகைக்கு அருகில் உள்ள நாணயக் குறியைத் தட்டவும்.
SplitEase ஆப் இன்னும் தமிழில் கிடைக்கவில்லை. அடைப்புக்குறிக்குள் உள்ள பொத்தான் பெயர்கள் திரையில் ஆங்கிலத்தில் தோன்றுபவை.