செலவைத் திருத்துவது அல்லது நீக்குவது எப்படி?
சேமித்த பிறகும் செலவைச் சரிசெய்யலாம். புதுப்பிக்கப்பட்ட நிலுவைகளைக் குழுவில் உள்ள அனைவரும் பார்ப்பார்கள்.
படிகள்
- குழுவைத் திறந்து செலவைத் தட்டவும்.
- மாற்ற, திருத்து (Edit) என்பதைத் தட்டி, மாற்றங்களைச் செய்து சேமி (Save) என்பதைத் தட்டவும்.
- நீக்க, ⋯ பொத்தானைத் தட்டி, பிறகு நீக்கு (Delete) என்பதைத் தட்டி உறுதிப்படுத்தவும்.
நீக்கிய செலவைத் திரும்பப் பெற முடியாது.
SplitEase ஆப் இன்னும் தமிழில் கிடைக்கவில்லை. அடைப்புக்குறிக்குள் உள்ள பொத்தான் பெயர்கள் திரையில் ஆங்கிலத்தில் தோன்றுபவை.