ரசீதை ஸ்கேன் செய்து செலவைச் சேர்ப்பது எப்படி?
ரசீது ஸ்கேன், பில்லிலிருந்து மொத்தத் தொகையையும் விவரங்களையும் படிக்கிறது, அதனால் நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டியதில்லை. இது SplitEase+-இன் ஒரு பகுதி.
படிகள்
- + பொத்தானைத் தட்டி, பிறகு ஸ்கேன் (Scan) என்பதைத் தட்டவும்.
- முழு பில்லையும் படம் எடுக்கவும், அல்லது ஏற்கனவே உள்ள கோப்பைப் பயன்படுத்த கேலரி (Library) அல்லது PDF என்பதைத் தேர்வுசெய்யவும்.
- SplitEase கண்டறிந்த விவரங்களைச் சரிபார்த்து பயன்படுத்து (Use) என்பதைத் தட்டவும்.
- யார் செலுத்தினார், எப்படிப் பிரிக்கப்படுகிறது என்பதைச் சரிபார்த்து, சேமி (Save) என்பதைத் தட்டவும்.
படத்தைப் படிக்க அது SplitEase-க்குப் பதிவேற்றப்படும். அது எப்படிக் கையாளப்படுகிறது என்பதற்கு எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பாருங்கள்.
ஸ்கேன்களில் பிழைகள் ஏற்படலாம். சேமிப்பதற்கு முன் எப்போதும் தொகையைச் சரிபார்க்கவும்.
SplitEase ஆப் இன்னும் தமிழில் கிடைக்கவில்லை. அடைப்புக்குறிக்குள் உள்ள பொத்தான் பெயர்கள் திரையில் ஆங்கிலத்தில் தோன்றுபவை.