SplitEase குழுவுக்கு நண்பர்களை அழைப்பது எப்படி?
ஒவ்வொரு குழுவுக்கும் ஓர் அழைப்புக் குறியீடு உண்டு. குறியீடு, இணைப்பு அல்லது QR குறியீடு உள்ள எவரும் SplitEase ஆப்பிலிருந்து குழுவில் சேரலாம்.
படிகள்
- குழுவைத் திறந்து, குழு அமைப்புகள் (Group settings) திறக்க மேலே உள்ள குழுப் பெயரை அல்லது ⋯ பொத்தானைத் தட்டவும்.
- அழைப்புக் குறியீடு (Invite code) அட்டையைக் கண்டறியவும்.
- அழைப்பு இணைப்பை நகலெடுக்க இணைப்பை நகலெடு (Copy link) என்பதைத் தட்டவும், அல்லது QR குறியீட்டைக் காட்டி உங்கள் ஃபோனில் உள்ள எந்த ஆப் மூலமும் அழைப்பை அனுப்ப பகிர் (Share) என்பதைத் தட்டவும்.
ஏற்கனவே SplitEase பயன்படுத்தும் நண்பர்களை நேரடியாகச் சேர்க்க, குழு நிர்வாகிகள் உறுப்பினர்களைச் சேர் (Add members) என்பதையும் தட்டலாம்.
அழைப்புக் குறியீடுகள் காலாவதியாகலாம். குறியீடு வேலை செய்யவில்லை என்றால், அதே திரையிலிருந்து புதிய ஒன்றைப் பகிருங்கள்.
SplitEase ஆப் இன்னும் தமிழில் கிடைக்கவில்லை. அடைப்புக்குறிக்குள் உள்ள பொத்தான் பெயர்கள் திரையில் ஆங்கிலத்தில் தோன்றுபவை.