ஒரு குழுவில் ஒன்றுக்கு மேற்பட்ட நாணயங்களைப் பயன்படுத்தலாமா?

ஆம். ஒவ்வொரு குழுவுக்கும் ஓர் இயல்பு நாணயம் உண்டு, ஒவ்வொரு செலவும் வேறு நாணயத்தைப் பயன்படுத்தலாம். வெளிநாட்டுப் பயணங்களில் இது உதவும்.

படிகள்

  1. செலவைச் சேர்க்கும்போது அல்லது திருத்தும்போது, தொகைக்கு அருகில் உள்ள நாணயக் குறியைத் தட்டி ஒரு நாணயத்தைத் தேர்வுசெய்யவும்.
  2. குழுவின் இயல்பு நாணயத்தை மாற்ற, குழு அமைப்புகள் (Group settings) திறந்து இயல்பு நாணயம் (Default currency) என்பதைத் தட்டவும். குழு நிர்வாகிகள் மட்டுமே இதை மாற்ற முடியும்.

SplitEase நாணயங்களுக்கு இடையே மாற்றம் செய்யாது. நிலுவைகளும் கணக்குத் தீர்க்க வேண்டிய தொகைகளும் ஒவ்வொரு நாணயத்துக்கும் தனித்தனியாகக் காட்டப்படும்.

புதிய குழுக்களுக்கான நாணயம் சுயவிவரம் (Profile) → நாணயம் (Currency) என்பதிலிருந்து எடுக்கப்படும்.

SplitEase ஆப் இன்னும் தமிழில் கிடைக்கவில்லை. அடைப்புக்குறிக்குள் உள்ள பொத்தான் பெயர்கள் திரையில் ஆங்கிலத்தில் தோன்றுபவை.

தொடர்புடைய கேள்விகள்

இன்னும் உதவி தேவையா?

எங்களுக்கு எழுதுங்கள், SplitEase குழுவைச் சேர்ந்த ஒருவர் பதிலளிப்பார்.

ஆதரவைத் தொடர்புகொள்ளுங்கள்
மொழி: தமிழ்