ஒருவருடன் கணக்கைத் தீர்ப்பது எப்படி?
யார் யாருக்கு எவ்வளவு தர வேண்டும் என்பதை SplitEase கண்காணிக்கும், ஆனால் பணப் பரிமாற்றங்களைக் கையாளாது. வழக்கமாகச் செலுத்துவது போல் மற்றவருக்குச் செலுத்திவிட்டு, இருவரின் நிலுவையும் புதுப்பிக்கப்பட ஆப்பில் அதைப் பதிவுசெய்யுங்கள்.
படிகள்
- குழுவைத் திறந்து கணக்கைத் தீர் (Settle up) என்பதைத் தட்டவும்.
- நீங்கள் ஒருவருக்குச் செலுத்தியிருந்தால், அவர் பெயருக்கு அருகில் உள்ள கட்டணத்தைப் பதிவுசெய் (Record payment) என்பதைத் தட்டி, தொகையைச் சரிபார்த்து உறுதிப்படுத்தவும். நீங்கள் தர வேண்டியதில் ஒரு பகுதியையும் பதிவுசெய்யலாம்.
- யாராவது உங்களுக்குச் செலுத்தியிருந்தால், அவர் பெயருக்கு அருகில் உள்ள பெற்றதாகக் குறி (Mark as received) என்பதைத் தட்டி உறுதிப்படுத்தவும்.
முந்தைய கட்டணங்களைப் பார்க்க, அதே திரையில் வரலாறு (History) என்பதைத் தட்டவும்.
SplitEase ஆப் இன்னும் தமிழில் கிடைக்கவில்லை. அடைப்புக்குறிக்குள் உள்ள பொத்தான் பெயர்கள் திரையில் ஆங்கிலத்தில் தோன்றுபவை.