SplitEase சரிபார்ப்புக் குறியீடு எனக்கு வரவில்லை
உங்கள் ஃபோன் எண்ணுக்கு SMS மூலம் அனுப்பப்படும் 6 இலக்கக் குறியீட்டின் மூலம் SplitEase உங்களை உள்நுழையச் செய்கிறது.
படிகள்
- திரையில் உள்ள எண் சரியானதா எனச் சரிபார்க்கவும். இல்லையென்றால், மாற்று (Change) என்பதைத் தட்டி மீண்டும் உள்ளிடவும்.
- ஒரு நிமிடம் காத்திருக்கவும். உங்கள் நெட்வொர்க் காரணமாகச் செய்திகள் தாமதமாகலாம்.
- கிடைக்கவில்லையா? (Didn't get it?) என்பதைத் தட்டவும். 60 விநாடிகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் அனுப்பு (Resend now) கிடைக்கும். புதிய குறியீட்டைப் பெற அதைத் தட்டவும்.
- உங்கள் ஃபோனில் சிக்னல் உள்ளதா, தெரியாத அனுப்புநர்களின் செய்திகள் தடுக்கப்படவில்லையா என்பதை உறுதிசெய்யவும்.
பல முறை முயன்ற பிறகு, மீண்டும் முயல்வதற்கு முன் சில நிமிடங்கள் காத்திருக்கும்படி கேட்கப்படுவீர்கள்.
இன்னும் குறியீடு வரவில்லையா? நீங்கள் பயன்படுத்திய ஃபோன் எண்ணுடன் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
SplitEase ஆப் இன்னும் தமிழில் கிடைக்கவில்லை. அடைப்புக்குறிக்குள் உள்ள பொத்தான் பெயர்கள் திரையில் ஆங்கிலத்தில் தோன்றுபவை.